2012-04-20 15:44:36

போர்னெயோ தீவில் பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் கூட்டம்


ஏப்.20,2012. இந்தோனேசியா, புருனெய், மலேசியா ஆகிய நாடுகளின் 2 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிலான பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், WWF என்ற உலக வனப் பாதுகாப்பு அமைப்பும் அதன் உறுப்பு அமைப்புகளும், இந்தோனேசிய அரசும் சேர்ந்து மூன்று நாள்கள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் “அனைத்துலக புவி தின”த்தையொட்டி ஜகார்த்தாவில், “இவ்வுலகுக்கான பசுமைப் பொருளாதாரம்” என்ற இக்கூட்டத்தை நடத்தியது இவ்வமைப்பு.
Heart of Borneo (HoB) என்ற பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Borneo தீவில் வெப்பமண்டல பருவமழைக்காடுகளைப் பாதுகாக்கும் Heart of Borneo என்ற திட்டத்திற்கு இந்தோனேசியா, புருனெய், மலேசியா ஆகிய நாடுகள் 2007ம் ஆண்டில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.