2012-04-20 15:37:15

தாய்லாந்து மக்கள் வாழ்வை மதிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்


ஏப்.20,2012. தாய்லாந்து மக்கள் மனித வாழ்வை மதித்து, கருக்கலைப்பு மற்றும் தற்கொலைகளைத் தவிர்த்து நடக்குமாறு அந்நாட்டு ஆயர் பேரவை அரசுக்கும் குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாய்லாந்து சமுதாயத்தில் நிலவும் ஆன்மீக வெறுமையையும் பிளவுகளையும் அகற்றுவதற்கு உதவும் நோக்கத்தில், வருகிற செப்டம்பரில் வெளியிடப்படும் ஆயர்களின் மேய்ப்புப்பணி அறிக்கை அமைந்துள்ளது என்று அருட்பணி Otfried Chan தெரிவித்தார்.
தாய்லாந்து ஆயர்களின் அறிக்கை குறித்துப் பேசிய, அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் அருட்பணி Chan, கருவில் வளரும் குழந்தைகளின் பாதுகாவலரான புனித Gianna பக்தியைப் பரப்பவும், மக்கள் கருக்கலைப்பைப் புறக்கணிக்கவும் ஆயர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர் என்று தேசிய நலவாழ்வுத் துறை கூறியது.
ஆயினும் இவ்வெண்ணிக்கை சுமார் 5 இலட்சம் என்று அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.