2012-04-19 15:17:11

இறைவனின் செய்தியை மக்களிடம் எடுத்துச்செல்ல Social media எண்ணற்ற வாய்ப்புக்களைத் தருகின்றன


ஏப்ரல்,19,2012. இணையதளமும், Social media எனப்படும் புதியத் தொடர்பு முறைகளும் இறைவனின் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்ல எண்ணற்ற வாய்ப்புக்களைத் தருகின்றன என்று புதியத் தொடர்பு முறைகளில் வல்லுனரான Brent Dusing, கூறினார்.
Facebook எனப்படும் புதியத் தொடர்பு முறை வழியாக 'மோசேயின் பயணம்' என்ற புதியதொரு கணணி விளையாட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தியவர் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த Brent Dusing.
இவர் அறிமுகப்படுத்திய 'மோசேயின் பயணம்' என்ற இந்த விளையாட்டைக் கடந்த ஒன்பது மாதங்களில் 217000 பேர் விரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இறைவார்த்தையை இன்னும் அதிகமாகவும், ஆழமாகவும் அறிந்து கொள்ள இந்த விளையாட்டு இளையோரைத் தூண்டி வருவதைக் காண முடிகிறது என்று Brent Dusing கூறினார்.
விவிலியத்தின் அடிப்படையில் மற்றுமொரு விளையாட்டைத் தங்கள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும், விரைவில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் Brent Dusing கூறினார்.








All the contents on this site are copyrighted ©.