அரசியல் வன்முறைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற பாகிஸ்தான் தலத்திரு அவை குழுக்கள்
ஏப்ரல்,17,2012. அண்மை வாரங்களில் பாகிஸ்தானில் அரசியல் வன்முறைகளால் 100க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கில் சமூகப் பாதுகாப்பு
குழுக்களை கராச்சியில் உருவாக்கியுள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க திருஅவை. பல்வேறு
கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் வல்லுனர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள
இக்குழுக்களுக்கு கராச்சியின் ஃபிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. கராச்சியில்
வன்முறைகள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நிலைகளில் சிறுபான்மையினராக இருக்கும்
மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியதன் தேவையை உணர்ந்து இக்குழுக்களை பாகிஸ்தான் கிறிஸ்தவ
சபைகள் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார் இக்குழுக்களின் ஒருங்கமைப்பாளர் Rasheed Gill. மனித
உரிமை மீறல்கள் பதிவுச்செய்யப்பட்டு, உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு, குறிப்பாக
பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்படும் என மேலும் கூறினார் அவர்.