2012-04-13 15:11:40

மியான்மாரில் பிரித்தானிய பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்கச் சுற்றுப் பயணம்


ஏப்.13,2012. அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானிய பிரதமர் ஒருவர் முதன் முறையாக மியான்மாருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மியான்மாரின் Nay Pyi Tawக்கு இவ்வெள்ளியன்று சென்ற பிரித்தானிய பிரதமர் David Cameron, மியான்மார் அரசுத்தலைவர் Thein Seinயும், மக்களாட்சி ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu சி யையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடைபெற்ற மியான்மாருக்கு எதிராக ஐரோப்பிய சமுதாய அவை, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் பிற நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன.
1948ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து மியான்மார் சுதந்திரம் அடைந்த பின்னர் தற்போது அந்நாடு சென்றுள்ள முதல் பிரித்தானிய பிரதமராக டேவிட் காமரூன் இருக்கின்றார்







All the contents on this site are copyrighted ©.