2012-04-13 15:06:23

அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் நீதியற்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்


ஏப்.13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர்கள் தங்களது குடியுரிமைக் கடமை மற்றும் விசுவாசப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டின் நீதியற்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு, சமய சுதந்திரம் குறித்த தங்களது புதிய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.
“நமது முதலும் முக்கியமுமான மதிப்புமிக்க சுதந்திரம்” என்ற தலைப்பில் 12 பக்க அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சமய சுதந்திரம் குறித்தப் பணிக்குழு, இந்தச் சுதந்திரத்திற்காக இரண்டு வாரங்கள் செபிக்குமாறும் கேட்டுள்ளது.
புனிதர்கள் John Fisher, Thomas More ஆகியோரின் திருவிழாத் திருவிழிப்புத் தொடங்கும் ஜூன் 21ம் தேதியிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி வரை இக்கருத்துக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளது அப்பணிக்குழு.
அத்துடன், இவ்வாண்டு நவம்பர் 25ம் தேதி சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, சமய சுதந்திரம் குறித்து ஆயர்களும் அருட்பணியாளர்களும் மறையுரையாற்றுமாறும் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.