2012-04-10 15:02:18

நைஜீரியாவில் கிறிஸ்தவ கோவில்கள் மீது தாக்குதல்


ஏப்ரல்,10,2012. கிறிஸ்து உயிர்ப்புவிழாக் கொண்டாட்டங்களின்போது, நைஜீரியாவின் கிறிஸ்தவக் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் KADUNA என்ற நகரில் உள்ள கிறிஸ்தவக் கட்டிடம் ஒன்றினுள் தீவிரவாதி ஒருவர் நுழைய முயன்றதைப் பாதுகாப்புத் துறையினர் தடுத்தபோது, அவர் கொணர்ந்த வெடிகுண்டு இயக்கப்பட்டு பெரும் சேதம் நிகழ்ந்தது.
இத்தாக்குதல் குறித்து தன் ஆழந்த கவலையை வெளியிட்ட KADUNA பேராயர் Matthew Man-oso Ndagoso, மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் இத்தகையத் தாக்குதல் முடிவுக்கு வரவேண்டுமெனில், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுவது ஒன்றே நைஜீரியாவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று கூறினார்.
38 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது Boko Haram என்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிறிஸ்தவக் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சில வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.