2012-04-10 15:03:49

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டம் அரசுத்துறையினரால் சேதமாக்கப்பட்டுள்ளது


ஏப்ரல்,10,2012. ஈரானின் Kerman மாநிலத்திலுள்ள 200 ஆண்டுகள் தொன்மையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தை அரசுத்துறையினர் முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனமான Mohabatன் கூற்றுப்படி, Kermanன் வரலாற்றுச் சிறப்புமிக்க கிறிஸ்தவக் கட்டிடம் ஒன்றை ஏற்கனவே சேதப்படுத்தியுள்ள அரசுத்துறையினர், தற்போது கல்லறைத் தோட்டத்தையும் முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது.
கல்லறைத் தோட்டம் அழிவுக்குள்ளாக்கப்பட்டது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வரத்துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, இது குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈரானின் கலாச்சார பாரம்பரிய அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
Kerman நகரில் அரசுத்துருப்புகளால் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவக்கட்டிடம் 2009ம் ஆண்டிலேயே தேசிய நினைவுச்சின்னமாக பதிவுச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.