2012-04-09 14:18:53

கவிதைக் கனவுகள்.... வேப்பமரம்


முப்பத்தைந்து டிகிரி வெப்பம்
வியர்வையில் குளித்த உடல்
வேம்புக் காற்றில் உலர
சுகம்தந்த மருத்துவத்தில் கண்ணயர
பறந்து விழுந்த வேம்பு இலை முகத்தை வருட
வேம்பு அடடா... என்ன சுகம் எவ்வளவு சுகம்
பழைய நினைவில் மனம்....
அம்மைநோய் கண்டு படுத்திருந்த நேரம்
வேம்பு இலைகள் என் தலையில்
வேப்ப எண்ணெய் என் உடம்பில்
வேப்பங்கொளுந்து என் வாயில்
வேப்ப இலைகள் கொத்துக் கொத்தாய் வீட்டுக் கதவில்
அம்மா சொன்னார்....
அம்மை நோய் வெளியேற்றும் விஷக் கிருமிகள்
வெளியே போய்ப் பிறரைத் தொற்றாமல்
கொன்றுவிடும் என்று.
வேம்பு ஊர்நலமும் காக்கும் ஊர்க்காவலி.
வேம்புக்கடியில் காலை மாலை அமர்ந்தால்
மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி
ஆதி சக்தி மூலிகை, பராசக்தி மூலிகை, வேம்பு
பெயர் சூட்டினார்கள் வேப்பமரச் சக்தி அறிந்த சித்தர்கள்.
வேம்பு, நோய்கள் தீர்க்கும் மூலிகை நிபுணர்
வேம்பு, பூச்சிக் கொல்லி, கிருமி நாசினி, கொசுப்பத்தி.
வேம்பே! நீ வாழ்வதே பிறருக்காகத்தானோ
வேம்பு சொன்னது....
பிறருக்காக வாழ்வதற்கே நாம் பிறந்திருக்கிறோம்








All the contents on this site are copyrighted ©.