2012-04-08 12:38:01

உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்கள்


வத்திக்கான் வானொலி அன்புள்ளங்கள் அனைவருக்கும் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய ஒலிபரப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற பொருள் கொண்ட 'Urbi et Orbi' என்ற சிறப்புச் செய்தியை வழங்குகிறார். கேட்கத் தவறாதீர்கள்.
இச்செய்தியைத் தொடர்ந்து, அவர் உலகின் 65 மொழிகளில் வாழ்த்துக்களை வழங்கியுள்ளார். இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் மற்றும் மலையாளம ஆகிய மொழிகளிலும் வாழ்த்துக்களை வழங்கியுள்ளார். இறுதியில் இப்பெருவிழாவுக்கென தனது சிறப்பு அசீரையும் அவர் வழங்கியுள்ளார். உயிர்ப்புப் பெருவிழாவின் இச்சிறப்பு நிகழ்ச்சியைக் கேட்டு பயனடையுமாறு உங்களை அழைக்கிறோம்.








All the contents on this site are copyrighted ©.