2012-04-03 15:39:33

கவிதைக் கனவுகள் - மனித உடலின் மந்திரக்கோல்


உடலின் மிகச் சிறு அங்கம் நாவு...
கடுகளவாயினும் காரம் குறையாத நாவு...
மனித உடலின் மந்திரக்கோல்.

மந்திரக் கோலின் மாயங்களில்
வாழ்வும் இருக்கும், தாழ்வும் இருக்கும்.
'நல்லாயிரு' என்று சொல்வதும்,
'நாசமாப்போ' என்று சொல்வதும்
அதே நாவே.

சொல்வது நாவேன்றாலும்
சொற்களின் பிறப்பிடம் மனம்
வாழ்த்தச் சொல்வதும்
வசையால் கொல்வதும் மனமே
எய்தவன் எங்கோ இருக்க,
அம்பை நோவது வீண்தானே
மந்திரவாதியாம் மனம் இருக்க
மந்திரக் கோலாம் நாவினைக்
குற்றம் சொல்வதும் வீண்தானே

யாகாவாராயினும் நாகாக்க என்றும்
ஆறாத வடு நாவினால் சுட்டது என்றும்
வள்ளுவன் சொன்ன வேதங்கள்
நாவென்ற மந்திரக் கோலுக்கு மட்டுமல்ல,
நானென்ற மந்திரவாதிக்கும் சேர்த்தே...









All the contents on this site are copyrighted ©.