2012-04-03 15:40:55

ஆப்ரிக்காவில் அனைத்துலக இளையோர் தினத்தை நடத்துவதற்கான நேரம் கனிந்துள்ளது - திருப்பீட கர்தினால் Rylko


ஏப்.03,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் உலக இளையோர் தினத்தை நடத்துவதற்கான நேரம் கனிந்துள்ளது, அக்கண்டம் இதற்குத் தகுதியுடையதாக இருக்கின்றது என்று, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
2013ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம் குறித்து நிருபர்களிடம் பேசிய கர்தினால் ரில்கோ, இளையோர்க்குச் செய்யும் மேய்ப்புப்பணிகளில் உலக இளையோர் தினங்கள் தற்போது முக்கிய அங்கம் வகித்து வருகின்றன என்று தெரிவித்தார்.
பிரேசிலில் 2014ம் ஆண்டில் உலக கால்பந்து விளையாட்டு, 2016ம் ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகியவை நடைபெறவதற்கு முன்னர், அந்நாட்டில் உலக இளையோரை வரவேற்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்றும் கர்தினால் ரில்கோ கூறினார்.
2013ம் ஆண்டு ஜூலை 23 முதல் 28 வரை ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினத்திற்குசுமார் அறுபதாயிரம் தன்னார்வப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த உலக இளையோர் தினத்திற்கான Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களை சுமார் ஆறு இலட்சம் பேர் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர்.
பிரேசில் உலக இளையோர் தின இணையதள முகவரி







All the contents on this site are copyrighted ©.