2012-04-02 15:49:21

மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறிக்கை


ஏப்ரல்,02,2012. மத சுதந்திரத்தை மறுக்கும் நாடுகள் பற்றிய 2012ம் ஆண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது அனைத்துலக மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அவை.
மியான்மார், சீனா, எகிப்து, எரிட்ரியா, ஈராக், ஈரான், நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான், தஜிக்கிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகள் மத சுதந்திரம் உட்பட மனிதனின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் நாடுகள் என இவ்வவை குறிப்பிட்டுள்ளது.
மத உரிமைகள் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் நாடுகள், ஏழ்மை, பாதுகாப்பற்ற நிலை, போர், அச்சுறுத்தல், வன்முறை போன்றவைகள் முளைவிட காரணமாகும் நாடுகளாக மாறுகின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் இவ்வவையின் தலைவர் லியோனார்த் லியோ







All the contents on this site are copyrighted ©.