2012-04-02 15:48:07

புனித வெள்ளிக் கொண்டாட்டங்களுக்கென மும்பை மைதானம் மறுக்கப்பட்டுள்ளது


ஏப்ரல்,02,2012. கடந்த 55 ஆண்டுகளாக புனித வெள்ளிக் கொண்டாட்டங்களுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த மும்பையின் August Kranti திறந்தவெளி அரங்கில், இவ்வார புனித வெள்ளிக்கொண்டாட்டங்கள் நடைபெற அனுமதி மறுத்துள்ளது மகராஷ்டிர அரசு.
இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இவ்வரங்கைத் தர அரசு மறுத்துள்ளது Cumballa Hill புனித ஸ்டீபன் கோவில் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது.
மதக்கொண்டாட்டங்களுக்கென அரசு மைதானங்களை ஒதுக்கக்கூடாது என்ற மும்பை நீதி மன்றத்தின் 2006ம் ஆண்டு கட்டளையை மேற்கோள்காட்டி இம்மைதானம் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தடையை அப்போதே செயல்படுத்தாமல், தற்போது புனித வெள்ளி கொண்டாட்டங்களின் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் புனித ஸ்டீபன் கோவில் அருட்தந்தை Ernest Fernandes.
இக்கேள்வி குறித்து பதிலளிக்க மறுத்துள்ளார் மகராஷ்டிரா மாநில சுற்றுலா மற்றும் கலச்சாரத்துறை செயலர் ஆனந்த் குல்கர்னி.







All the contents on this site are copyrighted ©.