2012-04-02 14:34:44

கவிதைக் கனவுகள் – மண்ணில் விண்


கேள்வி ஒன்று எழுந்தது
கேட்பதற்குத் தேடினார்
கேள்வி ஞானமிக்க குருவை.
விண்ணகம் என்ற ஒன்று உண்டாம்
விரைந்து அடைய வழி காட்டும்.

விண்ணகம் நரகம் இவை
அவரவர் படைப்பு அவரவர் சுமப்பது
அவற்றை வலிந்து அடைய முயற்சி தேவையில்லை.
அற்புதமான பதிலில் திணறினார் சீடர்.
அப்படியானால் எப்படி இயலும்...

மெய்ஞானம் பேசியது....
மனிதர் மீது உண்மை அன்பு
மனிதர் வாழ ஆசீர்
மனிதர்க்கு நன்மை
மனிதர் மீது தீய எண்ணம் தவிர்த்தல்
இவற்றால் நீ படைப்பது
விண்ணகத்தை மண்ணகத்தில்.
மனிதர் மீது வெறுப்பு
நரகத்தை மண்ணகத்தில்.
மனிதருக்கு வாழ்வை நரகமாக்குவது
வாழ்வை உனக்கே நரகமாக்குகிறாய்
நீ விதைப்பது உனக்கு அறுவடை.

அன்பையா? வெறுப்பையா?
எதைத் தேர்ந்தெடுப்பது?
அது உனது கையில்!








All the contents on this site are copyrighted ©.