மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்
- கொல்கத்தா பேராயர்
மார்ச்,29,2012. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம்
பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா கூறினார். Asansol,
Bagdogra, Baruipur, Kolkata, Darjeeling, Jalpaiguri, Krishnagar, Raigunj ஆகிய மறைமாவட்டங்களின்
ஆயர்கள் மற்றும் குருக்கள் கலந்துகொண்ட ஒரு மறைபரப்புப் பணி மாநாட்டின்போது பேராயர் டிசூசா
பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். கம்யூனிசமும், கிறிஸ்தவமும் ஏழைகளுக்கு
உதவுவது அவசியம் என்பதை வலியுறுத்தி வருகின்றன என்று கூறிய பேராயர் டிசூசா, ஏழைகளுக்கு
உதவும் வழிகளில் கம்யூனிசக் கொள்கையாளர்கள் எடுக்கும் முடிவுகள் தற்காலத்திற்கு ஏற்றதாக
அமையவில்லை என்றும் எடுத்துரைத்தார். மார்க்சியத் தலைவர் ஜோதி பாசுவும், அன்னை தெரேசாவும்
வேறுபட்டக் கொள்கைகள் கொண்டவர்கள் ஆயினும், இருவரும் ஏழைகள் மட்டில் அக்கறை கொண்டவர்களாய்
இருந்ததால், ஒருவரை ஒருவர் மதித்தனர் என்றும் பேராயர் டிசூசா சுட்டிக் காட்டினார். கடந்த
சில நாட்களாக நடைபெற்ற இந்த மறைபரப்புப் பணி மாநாட்டின் இறுதித் திருப்பலியை இந்தியாவுக்கான
திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennachhio நிறைவேற்றினார்.