2012-03-29 16:28:36

கவிதைக் கனவுகள்... கிராம வாழ்வு


குறுகிய வீதிகள் நெருக்கமானக் குடிசைகள்
முற்றத்துச் சாக்கடைகள் காளையரின் கிரிக்கெட்டுகள்
அழுக்கு ஆடைகளில் சிறாரின் விளையாட்டுக்கள்
அந்திப் பொழுதில் ஆடவரின் அரட்டைகள்
உழைப்பை பறைசாற்றும் மூத்தோரின் தேகங்கள்
கிராம வாழ்க்கையில்...
பட்டினி கிடப்பார், ஆனால் பிறர் துயர்பட்டால்
கலங்கிக் கண்ணீர் கழுவுவார்.
ஒரு வீட்டின் துயரம் ஊரின் துயரம்
வீண்பழி வருமென ஒதுங்காத மக்கள்.
ஒரு வீட்டின் இன்பம் ஊரின் இன்பம்
ஒன்றுபட்டு வாழ்வதன் அர்த்தம் புரிந்த மக்கள்.
ஒன்றாக்கூடி கூட்டாஞ்சோறு சமைத்து
ஒரு குடும்பமாய் வாழும் சூழல்
கிராம வாழ்க்கையில்...
பணம் காசு அதிகமில்லை
பகட்டான ஆடையில்லை
ஒழுக்கம் படிக்கப் பள்ளி சென்றதில்லை
சட்டம் ஒழுங்குப் பேசத் தெரியாது
சாலை விதிகள் படித்ததில்லை, ஆனால்
எல்லாம் சரியாக நடக்கும்
கிராம வாழ்க்கையில்...
கறைபடாத மனங்களின் மணத்தை
கடமை மறவாத மனிதரின் மேன்மையை
விட்டுக் கொடுத்து வாழ்வதன் உன்னதத்தை
கொடுத்து வாழ் கெடுத்து வாழாதே என்பதனை
கற்றுத் தரும் மனிதரைச் சந்திக்கலாம்
கிராம வாழ்க்கையில்...








All the contents on this site are copyrighted ©.