2012-03-23 15:12:54

கவிதைக் கனவுகள் - பயணங்கள்


கருவறையில் கவலையின்றி வளர்ந்து
காலம் கனிந்து ஞாலத்தின் மடியில்
வீறிட்ட ஒலியுடன் விழுவதில் தொடங்குவது
வாழ்க்கைப் பயணம்.

வாழ்க்கை, ஒரு பயணம்
மதிப்பை மலையாகக் கொண்டது
வெற்றியைச் சூடிக்கொள்ள விரும்புவது – ஆனால்
கரடுமுரடுகள், கடினங்கள், மேடுபள்ளங்கள்,
உராய்வுகள், உரசல்கள், வடுக்கள், காயங்கள்
வாழ்க்கைப்பயணத்தின் உண்மைச் சிலிர்ப்புகள்.

மலரிலே அழகு ரோஜா
அழகு ரோஜா முள்ளுக்குள்.
அழகு வாழ்க்கையும்
அழகு ரோஜா போல்.
இன்பத்துக்கு அடையாளம் ரோஜா
துன்பத்துக்கு அடையாளம் முள்கள்
ரோஜாக்களுக்குப் பாதுகாப்பு முள்கள்
ரோஜாக்களும் முள்களும் பிரிக்கமுடியாத நண்பர்கள்.

வாழ்க்கைப் பயணங்கள் தொடர்கின்றன
அறிந்த பாதை அறியாத பாதை
அறிந்த பாதைக்கு அவசியமில்லை ஆள்காட்டி
அறியாத பாதைக்கு அவசியம் ஆள்காட்டி.
பயணங்கள் தொடரத் தொடர
புதுப் பாதைகளும் பிறக்கின்றன.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்
தொடங்கும் பயணங்கள் நல்லதாகவே அமையட்டும்







All the contents on this site are copyrighted ©.