2012-03-21 13:55:06

மார்ச்21,2012 கவிதைக் கனவுகள் .......உண்மையான நோன்பு


சாகும்வரை உண்ணா நோன்பு
சாறு குடித்து உண்ணா நோன்பு
பாதியிலே முடிந்த உண்ணா நோன்பு
தேநீர் குடித்து முடித்த உண்ணா நோன்பும்
சாதனை செய்தது உண்ணா நோன்பு

தேச பக்திக்கு உண்ணாநோன்பு
தெய்வ பக்திக்கு உண்ணாநோன்பு
உடலை ஒறுக்க உண்ணாநோன்பு
உள்ளத்தை உருவாக்க உண்ணாநோன்பு
பக்தியின் மிகுதியில் உண்ணாநோன்பு
பரமன்பதம் சேர உண்ணாவிநோன்பு
உடலும் மனமும் நலம் பெற
உதவியது உண்ணாநோன்பு

அதிகம் சாப்பிட்டுச் செத்தவர் உண்டு
குறைத்துச் சாப்பிட்டுச் செத்தவர் அதிகம்
எட்டு நாளுக்கு ஒருநாள் விரதம்
எண்சான் உடம்பிற்கு உற்சாகம்
உழைக்கும் உடம்பு ஊதுவதில்லை
நோன்பு உடம்பு களைப்பதில்லை

உண்மை நோன்பு உண்மை மனமாற்றம்
பசித்தோரோடு பகிர்ந்துண்ணுதல்
ஆடையற்றோருக்கு ஆடை கொடுத்தல்
ஒடுக்கப்பட்டோரை விடுவித்தல்
கொடுமைத் தளைகளை அவிழ்த்தல்
தீயவழியை விலக்குதல்
கொடுஞ்செயலை விட்டொழித்தல்
நேரிய வழியில் நடத்தல் - இவை
இறைவன் விரும்பும் உண்ணா நோன்பு.








All the contents on this site are copyrighted ©.