2012-03-20 15:13:16

கிறிஸ்தவர்களால் உள்தூண்டுதல் பெற்ற இந்து மாணவர் ஒருவர் பெண் கைதிகளின் சிறாருக்கென இல்லம் அமைத்துள்ளார்


மார்ச்20,2012. நேபாளத்தில் கிறிஸ்தவர்களின் செயல்களால் உள்தூண்டுதல் பெற்று அந்நாட்டிலுள்ள பெண் கைதிகளின் சிறாருக்கென இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார் Pushpa Basnet.
காத்மண்டுவின் புனித சேவியர் கல்லூரியில் சமூகவியல் பயின்ற போது இயேசு சபை அருள்தந்தையரின் போதனைகள் மற்றும் தனது சக மாணவரியரிடமிருந்து ஏழைகளுக்குச் சமூகப்பணி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார் Pushpa Basnet.
நேபாளச் சிறைகளில் பல சிறார் தங்களது கைதித் தாய்களோடு வாழ வேண்டிய கட்டாய நிலை உள்ளது மற்றும் வெளியில் வாழும் சிறாரில் பலர் எவ்வித அரசு உதவியுமின்றி தெருக்களில் வாழ்கின்றனர்.
இச்சிறார்க்கென Pushpa Basnet தொடங்கியுள்ள Butterfly Home என்ற இல்லம், தாய்மாருடன் சிறையில் வாழும் சிறாருக்கு உணவு, உறைவிடம் மற்றும் கல்வி வசதிகளை அளித்து வருகிறது.
தற்சமயம் நேபாளச் சிறைகளில் சுமார் 80 சிறார் தங்கள் தாய்மாருடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், நேபாள மக்களில் 55 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்று ஐ.நா. கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.