2012-03-20 15:21:45

கவிதைக் கனவுகள் - கல்லில் பொறித்த கல்வி


கல்வி... பல வண்ணம் காட்டும் வைரம்...
கல்வி என்ற சொல்லுக்குள்
'கல்லில் பொறித்தது' என்ற பொருளும்
பொதிந்துள்ளது.
கல்லில் பொறித்தது, காலமெல்லாம் அழியாது.

'பள்ளி' என்ற சொல்
கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது - அந்தப்
பள்ளியில் படித்தது காலமெல்லாம் நிலைக்குமா?
'பள்ளி' என்றால் ‘உறக்கம்’ என்று
எள்ளி நகையாடத் தூண்டும்
எண்ணம் எனக்குள் ஏன்?

கற்றது கைம்மண் அளவு என்று
கற்றதும் கரைந்து போனது
கல்லாதது உலகளவென்று
சொன்னதும் புரியாமல் போனது

தாய் மடியில் கற்ற கல்வி
ஆயிரம் யுகமானாலும் அழியாது
தாய் மடி கல்வியே, கல்லில் பொறித்த கல்வி
வாய் நிறையச் சொல்வேன்... வாழ்நாளெல்லாம்.








All the contents on this site are copyrighted ©.