2012-03-12 15:13:05

கவிதைக் கனவுகள்...... வாழ்க்கைப் பாடம்


கண் கதிரவனைக் காண்கின்றது
மனம் மழையை நினைக்கிறது
வாய் வயல்வளத்தைப் பேசுகிறது - இப்படி
ஓருடம்பின் உறுப்புகள்
ஒரேபொழுதில் பல்வேறு சிந்தனைகள்

கண்ணொன்று காண, மனமொன்று நினைக்க
வாயொன்று பேச எனப் பாடினார்கள்
கண் முன்னே புகழ்ச்சி
கண் பின்னே இகழ்ச்சி
முதுகின் பின்னே குத்தல்
இவரா இப்படி என
வியர்க்க வைத்த விதவிதமான மனிதர்கள்

நம்பிய மனிதரிடம் நம்பிக்கைத் துரோகம்
பேசிய மனிதரிடம் பொய் பித்தலாட்டம்
ஆறுதல் தேடிய மனிதரிடம் போலித்தனம்
விழித்தது மனம் அழித்தது அறியாமையை

நம்பிக் கெட்ட மனிதர் சொன்ன பாடம்
நம்பாமல் கெட்ட மனிதர் சொன்ன பாடம்
இரண்டுக்கும் இடையில் நான் கற்ற பாடம்
இல்லை, நான் வேண்டும் அருள் - இறைவா
முகம் பார்க்காது அகம் பார்த்து
வாழ வரம் வேண்டும்.
உத்தமர்தம் உறவு வேண்டும்.
உண்மை உயிர்பெற வேண்டும்
வஞ்சகருக்கு வாழ்வு வேண்டும்
பகைவருக்கு அருள் வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.