2012-03-12 15:00:44

ஆப்ரிக்க வளர்ச்சித் திட்டங்களுக்கு ஸ்லோவாக்கிய நாட்டு கிறிஸ்தவச் சிறார்கள் நிதி திரட்டல்


மார்ச்,12,2012. சஹாராவை அடுத்த ஏழை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் ஸ்லோவாக்கிய நாட்டு கிறிஸ்தவச் சிறார்கள் ஒன்றிணைந்து 9 இலட்சம் யூரோக்களை திரட்டியுள்ளானர்.
கடந்த டிசம்பர் 25க்கும் ஜனவரி 7க்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்லோவாக்கியாவின் 1286 நகர்களைச் சேர்ந்த 2719 சிறார் குழுக்கள் 80 ஆயிரம் குடும்பங்களைச் சந்தித்து கிறிஸ்து பிறப்புப் பாடல்களைப் பாடி 9 இலட்சத்து எட்டாயிரத்து 150 யூரோக்களைத் திரட்டியுள்ளன.
26,000க்கும் மேற்பட்ட சிறார்கள் பங்குபெற்று ஆப்ரிக்காவின் ஏழைநாடுகளுக்கென திரட்டியுள்ள இத்தொகை, தென் சூடான், கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என செலவழிக்கப்படும்.








All the contents on this site are copyrighted ©.