2012-03-10 14:48:11

கவிதைக் கனவுகள் - கோவில் உள்ள ஊரில்...


கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
பழமொழியாய் சொன்னது, பயன்தரும் வழி அது
கோவில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்
புதுமொழியில் சொல்வது, பயம் தரும் புதிர் இது

கோவிலை நாடிச்செல்ல, கோடி, கோடி காரணங்கள்
ஆண்டவனைத் தரிசிக்க, ஆழ்மனதில் அமைதிபெற
பாரங்களைக் குறைத்துவிட, பாவங்களைக் கழுவி வர
கேள்விகளின் விடை காண, தேவைகளைத் தீர்த்து விட
இப்படியாய் காரணங்கள்... இன்னும் பல காரணங்கள்

கோவிலைச் சந்தையாக்கி, கோடி சேர்க்கும் வியாபாரம்
ஆலயத்தை ஆதாயமாக்கி, அரசியல் விளையாட்டுக்கள்
ஆண்டவன் பெயர் சொல்லி, தாண்டவமாடும் வன்முறைகள்...
இப்படி வளர்ந்துவிட்ட இன்னல்களால்...

கோவில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்...புதுமொழி சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.







All the contents on this site are copyrighted ©.