2012-03-09 16:10:26

நீதி அமைப்பு சிறாருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர்


மார்ச்09,2012. மரண தண்டனை, பிணையல் இல்லாத ஆயுள் தண்டனை, சிறைத் தண்டனை, உடல்ரீதியான தண்டனை உட்பட அனைத்து விதமான சிறார்க்கெதிரான சட்டரீதீயான வன்முறைகள் நிறுத்தப்படுமாறு ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர் நவிபிள்ளை வலியுறுத்தினார்.
சிறார்க்கெதிரான வன்முறைகள், சிறார் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், சில நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்று நவிபிள்ளை கூறினார்.
குற்றவாளிச் சிறாருக்கு உடல்ரீதியான தண்டனைகள் ஏறக்குறைய 30 நாடுகளிலும், கசையடிகள், கல்லெறிதல் அல்லது உடல் உறுப்பை முடமாக்குதல் உட்பட்ட தண்டனைகள் சில நாடுகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
சிறாருக்கு நீதி அமைப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.