2012-03-09 16:10:38

அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களை இரத்து செய்யுமாறு ஆயர்கள் ஒபாமாவுக்கு விண்ணப்பம்


மார்ச்09,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களை இரத்து செய்யுமாறு அந்நாட்டு ஆயர்கள் அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில், “அரசுத்தலைவரின் அணுஆயுதக் கொள்கை” குறித்து ஒபாமா நிர்வாகம் தற்போது ஆலோசித்து வருவதை முன்னிட்டு இவ்விண்ணப்பக் கடிதத்தை எழுதியுள்ளனர் ஆயர்கள்.
பனிப்போரை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அமைப்பை நடத்திச் செல்வதற்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு ஏறக்குறைய 21 ஆயிரம் கோடி டாலர் செலவழிப்பதற்குத் தற்போது நாடு திட்டமிட்டு வருகின்றது, ஆனால், பிற தேவைகளுக்கெனப் பல்லாயிரம் கோடி டாலரை சேமிக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் ஆயர்களின் கடிதம் கூறுகின்றது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களைக் குறைப்பதன் மூலம் பிற நாடுகளும் தங்களது அணுஆயுதங்களைக் குறைப்பதற்குத் தூண்டுகோலாய் இருக்கும், உலகமே அணுஆயுதங்களற்ற இடமாக மாறும் என்றும் ஆயர்களின் கடிதம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.