2012-03-08 15:22:01

கவிதைக் கனவுகள் – உலகப் பெண்கள் தினம்


மனுதர்மசாத்திரமும்
மதங்களின் போதனைகளும்
மகளிர் தம்மை
மதிக்காமல் ஒதுக்கி,
அடிமைப்பட்ட காலத்தில்...
ஆணுக்கு இணை பெண்
பெண்ணடிமை ஒழிப்பு
எட்டுமணிநேர வேலை,
வேலைக்கேற்ற ஊதியம்
வாக்குரிமை – என
மகளிர் மார்தட்டி ஓரணியாய்த் திரண்டெழுந்து
உலகையே விழிக்க வைத்து
வெற்றியைத் தட்டிய உன்னத நாள்
மார்ச் எட்டு! (1848)

பெண்ணே! உனக்கென ஓர் உலக விழா
உன்னைப் போற்றிப் பாடுது உலகம்
நீ அமுது படைப்பதில் ஔவையாய்...
அன்பு செலுத்துவதில் அன்னை தெரேசாவாய்...
வீரத்தில் ஜான்சி ராணியாய்...
விவேகத்தில் அன்னை இந்திராவாய்...
வரலாறு படைப்பதில் சுனிதா வில்லியம்சாய்...
சாதனை படைப்பதில் சானியா மிர்சாவாய்... இப்படி....
உயர்ந்த சாதனைகள் படைக்க
உன்னை வாழ்த்துது உலகம்!.

பெண்ணே! உற்றத் தோழியாய்
உயர்குடும்பத் தலைவியாய்
நற்றமிழ்ச் செல்வியாய்
நலம்பாடும் சகோதரியாய்
கற்றதனைத்தும் கடைப்பிடித்து
கடமையாற்றும் காரிகையாய் ....இப்படி....
விளங்கும் உன்னை
உளமார வாழ்த்திப் போற்றுகிறது
உலகம், உலக மகளிர் நன்னாளில்!

இவையெல்லாம் இருக்கட்டும்!
பெண்ணே! நீ உனக்கென வாழ்வது எப்போது
உண்மையான மாற்றம் வரும் அப்போது!








All the contents on this site are copyrighted ©.