2012-03-08 15:30:28

கடவுளின் வார்த்தையை அறிவிப்பது மனித வரலாற்றில் என்றுமே எளிதாக இருந்ததில்லை - வத்திக்கான் அதிகாரி


மார்ச்,08,2012. கடவுளின் வார்த்தையை அறிவிப்பது மனித வரலாற்றில் என்றுமே எளிதாக இருந்ததில்லை, இந்த நிலை இன்றும் தொடர்கிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைமையகமாக அமைந்துள்ள Strasbourg நகரில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெற்ற தென்கிழக்கு ஜரோப்பிய ஆயர்கள் கூட்டத்தில், இப்புதனன்று நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் மறையுரை ஆற்றுகையில், ஐரோப்பிய அவையின் அவைக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணிபுரியும் பேரருள்திரு Aldo Giordano, இவ்வாறு கூறினார்.
உலகில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் இறைவாக்கினர்கள் எப்போதும் துன்பங்களையேச் சந்தித்துள்ளனர் என்பதற்கு நாம் வாழும் காலத்தில் துன்புறும் கிறிஸ்தவர்களே சிறந்த சான்றுகள் என்று கூறிய அருள்தந்தை Giordano, பாகிஸ்தானில் கொல்லப்பட்ட Shahbaz Bhatti, பாக்தாத் நகரிலும், நைஜீரியாவிலும் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆகியோரை, தன் மறையுரையில் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்.
‘ஐரோப்பாவுக்கான திருப்பலி’ என்ற கருத்துடன் நடத்தப்பட்ட இந்தத் திருப்பலியில், மக்கள் ஒருவர் ஒருவருடன் சமாதானமாக வாழ்வது கடவுள் தரும் கோடை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 'காரித்தாஸ் இன் வெரிதாத்தே' ‘Caritas in Veritate’ மடலில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அருள்தந்தை Giordano, இந்த ஒரு முக்கியமான தேவைக்காக அனைவரையும் வேண்டும்படி அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.