2012-03-02 15:08:49

வத்திக்கானின் இரகசிய ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன


மார்ச்02,2012. வத்திக்கான் தனது வரலாற்றில் முதன் முறையாக, தனது இரகசிய ஆவணங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று ஆவணங்களைப் பொது மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.
வத்திக்கானின் இரகசிய ஆவணக் காப்பகத்தின் 400வது ஆண்டைக் சிறப்பிக்கும் நோக்கத்தில், உரோம் Capitoline அருங்காட்சியகத்தில், “Lux in Arcana” என்ற தலைப்பில் இந்த ஆவணக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
1521ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் சிங்கராயர், ஜெர்மன் துறவி மார்ட்டின் லூத்தரைத் திருஅவைக்குப் புறம்பாக்கியது, 1530ம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்ரி, திருமணமுறிவுக்காகத் திருத்தந்தை 8ம் கிளமெண்ட்டிடம் விண்ணப்பித்தது, வட அமெரிக்க இந்தியப் பூர்வீக இனத் தலைவர், ஒரு மரப்பட்டையில் திருத்தந்தை 13ம் சிங்கராயரை “செபங்களின் பெரும் போதகர்” என எழுதியது உட்பட பல முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வத்திக்கானின் ஆவணக் காப்பகத்தில், 8ம் நூற்றாண்டு ஆவணங்கள் உட்பட 35 ஆயிரம் ஆவணங்கள் உள்ளன.
கடந்த பிப்ரவரி 29ம் தேதியன்று திறக்கப்பட்ட இவ்வருங்காட்சியகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வரை வைக்கப்பட்டு இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.