2012-02-29 15:36:04

புனித பூமியில் கடும் குளிரில் வாடும் வறியோருக்கு உதவிகள்


பிப்.29,2012. ‘புனித பூமியின் நண்பர்கள்’ என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனமும், ‘பூமியின் மக்கள்’ என்ற கழகமும் இணைந்து புனித பூமியில் உள்ள 500க்கும் அதிகமான வறியோருக்கு உதவிகள் செய்துள்ளனர்.
புனித பூமியில், உறைவிடமும், உணவும் இன்றி, கடும் குளிரில் வாடும் வயது முதிர்ந்த 90 பேருக்கும், 450 குழந்தைகளுக்கும் 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு, உடைகள், மற்றும் கம்பளிப் போர்வைகளை இவ்வமைப்பினர் வழங்கினர்.
பிறரன்புப் பணிகள் மூலம் கிறிஸ்தவச் சமுதாய வாழ்வை வலுப்படுத்துவதே புனித பூமியின் நண்பர்கள் என்ற அமைப்பின் தலையாய நோக்கம் என்று இவ்வமைப்பின் உதவித் தலைவர் Peter Rand கூறினார்.
2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனித பூமியின் நண்பர்கள் என்ற இவ்வமைப்பு தற்போது இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படுகிறதென்றும், இவ்வமைப்பின் முதல் நோக்கம் புனித பூமியில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்வது என்றாலும், ஏனையப் பிறரன்புப் பணிகளிலும் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறதென்றும் ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.