2012-02-25 14:20:01

குவைத்தில் புதிய ஆலயங்கள் கட்டப்படுவதற்குத் தடை விதிக்க முயற்சி


பிப்.25,2012. குவைத் நாட்டில் புதிய ஆலயங்கள் கட்டுவதற்கும், இசுலாமுக்குத் தொடர்பில்லாத இடங்களில் வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் புதிய இசுலாமிய நாடாளுமன்றக் குழு முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையே, புதிய ஆலயங்களுக்கு எதிரான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Nabeel Al Fadhel, சமய சுதந்திரமும், மக்கள் தங்களது சமய நம்பிக்கைகளை வெளிப்படையாய் அறிவிக்கவும் கொண்டுள்ள உரிமைகளும், குவைத் அரசியல் அமைப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், இம்மசோதா குறித்துக் கருத்து தெரிவித்த, குவைத் தேசிய மனித உரிமைகள் கழகம், பொறுப்பற்றதனமான இந்நடவடிக்கை, குடிமக்களிடையே பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் என்று குறை கூறியது.
இன்னும், ஈரானின் தேசிய மொழியான பெர்சியத்தில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடத்தப்படுவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது







All the contents on this site are copyrighted ©.