2012-02-22 15:30:39

பாகிஸ்தான் அமைச்சர் கொலை வழக்கில் தொடர்புள்ள இளைஞர் குற்றவாளி என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை - காவல் துறை


பிப்.22,2012. பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் கொலையைக் குறித்து அரசு எடுத்து வரும் தாமதமான செயல்பாடுகள், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க வைக்கின்றன என்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி பாகிஸ்தான் சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் Bhatti 30 முறை சுடப்பட்டு இறந்தார்.
இராவல்பிண்டி நீதி மன்றத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இக்கொலையுடன் தொடர்புள்ளதாகக் கருதப்பட்ட அபித் மாலிக் என்ற இளைஞர் கொலை செய்தார் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று காவல் துறை கூறியது.
இவ்வழக்கு விசாரணையைக் குறித்து தன் கருத்தை ஆசிய செய்தி நிறுவனத்திற்கு வெளியிட்ட ஆயர் Anthony, காவல்துறையின் இந்த வாக்கு மூலம் இத்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைக்கும்படி அமைந்துள்ளது என்று கூறினார்.
தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி, தொடர்பற்ற நபர்களை கைது செய்து வரும் காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்றும், அபித் மாலிக்கை இக்குற்றத்திலிருந்து எளிதாக விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நீதிக்குப் புறம்பானது என்றும் ஆயர் Anthony எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.