2012-02-22 15:30:13

இந்தியர்கள் இருவர் இத்தாலியர்களால் கொல்லப்பட்ட வழக்கில் நீதியும் உண்மையும் நிலைநாட்டப்பட வேண்டும் - கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி


பிப்.22,2012. இந்தியக் கடல் பகுதியில் இந்தியர்கள் இருவர் இத்தாலியர்களால் கொல்லப்பட்ட வழக்கு தீர விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கூறினார்.
பிப்ரவரி 15ம் தேதி, கடந்த புதனன்று கேரளக் கடல் பகுதியில் மீன்பிடிப் படகில் இருந்த இரு இந்தியர்கள் மீது, அப்பகுதியில் பயணம் செய்த இத்தாலியக் கப்பல் ஒன்றில் காவல் பணியில் இருந்தவர்கள் சுட்டதால், அவர்கள் இருவரும் மரணமடைந்தனர்.
இவ்விருவரின் மரணத்தை அடுத்து, அவர்கள் மீது சுட்ட இரு இத்தாலியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கர்தினாலாக பொறுப்பேற்ற சீரோ மலபார் திருஅவைத் தலைவர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, இப்பிரச்சனையில் ஈடுபட்டு, சமரசம் செய்துவைக்க தயாராக இருப்பதாக இச்செவ்வாயன்று Fides நிறுவனத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
இச்செய்தியை மறுத்து, இப்புதனன்று தன் கருத்தை வெளியிட்ட கர்தினால் ஆலஞ்சேரி, நீதியும் உண்மையும் நிலைநாட்டப்படுவதையே தான் விரும்புவதாகவும், சமரசம் செய்வது தன் எண்ணம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.