2012-02-22 15:30:26

இந்தியர்கள் இத்தாலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையில் அமைதியைக் கொணர திருஅவை முயற்சிக்க வேண்டும்


பிப்.22,2012. இதற்கிடையே, இரு இந்தியர்கள் இத்தாலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனை இந்தியாவைப் பெருமளவில் பாதித்துள்ள ஒரு நிகழ்வு என்றாலும், இப்பிரச்சனையை நீதியோடும் உண்மையோடும் அணுகுவதே முக்கியமான செயல் என்று கேரளாவில் உள்ள ஒரு துறவுச் சபைத் தலைவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 15ம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த இருவரும் கத்தோலிக்கர்கள் என்பதால், இந்த நிகழ்வை மத அடிப்படையிலோ, நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள பிரச்சனையாகவோ காண்பதைத் தவிர்த்து, உண்மையைக் கண்டுபிடிக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று, கப்பூச்சின் சபையின் மாநிலத் தலைவர் அருள் சகோதரர் Raphael Paliakkara, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நாட்டுப் பிரச்சனையாக, மற்றும் மதப் பிரச்சனையாக ஊடகங்கள் இதனைப் பெரிதுபடுத்திவரும் வேளையில், அமைதியைக் கொணரும் முயற்சியில் திருஅவை முழுமூச்சுடன் ஈடுபடவேண்டும் என்று அருள்சகோதரர் Paliakkara எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.