2012-02-20 15:21:50

புதிய கர்தினால்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார் பாப்பிறை


பிப் 20, 2012. மூர்க்கத்தனங்களும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படும் மனித குல விவகாரங்களில் கிறிஸ்துவின் ஒளியையும் நம்பிக்கையையும் கொணரும் திருச்சபை என்றும் உயிர்துடிப்புடன் கூடிய பிரசன்னத்தைக் கொண்டுள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சனிக்கிழமையன்று திருச்சபையில் புதிதாக கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரையும் இத்திங்களன்று அவர்களின் உறவினர்களுடன் திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, திருச்சபையில் ஒன்றித்திருந்து அதன் மீட்புச் செய்தியை அறிவித்து, உண்மை மதிப்பீடுகளைப் பலப்படுத்தி, உண்மையில் நிலைத்திருந்து, அனைத்து நிகழ்வுகளிலும் அமைதியுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ஒன்றிப்பு என்பது திருச்சபையில் இறைவனின் கொடை, அதன் உதவியுடன் ஒவ்வொருவரும் வளரமுடியும் என மேலும் கூறினார் பாப்பிறை.
புதிய கர்தினால்களின் உறவினர்களும் நண்பர்களும், கர்தினால்களோடும் ஒருவர் ஒருவரோடும் விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றித்திருந்து துணிவுள்ள இறைசாட்சிகளாக விளங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.