2012-02-17 14:39:50

விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம்


பிப்.17,2012. வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் விண்வெளிப் பரிசோதனைக்கூட மற்றும் இராக்கட்டுக்களின் பாகங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு இயந்திரத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்து.
வேக்கூம் கிளீனர் மாதிரி செயல்படும் இவ்வியந்திம், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக் கூடியதாக இருக்கும் என்று, Lausanne லுள்ள உள்ள EPFL என்ற சுவிஸ் விண்வெளி மையம் அறிவித்திருக்கிறது.
பத்து மில்லியன் டாலர்கள் செலவில், விண்வெளியைச் சுத்தம் செய்யும் இத்திட்டம், மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஆரம்பமாகும் என்று அம்மையத்தின் இயக்குனர் Volker Gass கூறியுள்ளார்.
வானில், சுமார் 16 ஆயிரம் கழிவுப் பொருட்கள் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறன எனவும், இவற்றில் பழைய செய்மதிகள், சர்வதேச வெண்வெளி ஆய்வுக் கூடத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள், விண் ஓடங்கள் ஆகியவையும் அடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இவை ஒரு மணி நேரத்துக்கு இருபத்தெட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்றும், இந்தக் குப்பைகளும், துண்டுகளும் பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளுக்கும், ஆட்கள் பயணிக்கும் விண் ஓடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் மேலும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.