2012-02-17 14:37:24

கர்தினால்களுடன் திருத்தந்தை ஒருநாள் செபம், சிந்தனை


பிப்.17,2012. புதிய கர்தினால்களுக்கு மோதிரமும் சிவப்புத் தொப்பியும் வழங்கும் திருவழிபாட்டை வத்திக்கான் தூய பேதுரு பிசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை காலை 10 மணிக்கு நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் சீரோ-மலபார் ரீதித் திருஅவையின் தலைவரான பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஹாங்காங் ஆயர் John Tong Hon, அகுஸ்தீன் சபை அருள்தந்தை Prosper Grech, இயேசு சபை அருள்தந்தை Karl Josef Becker உட்பட 22 பேரை புதிய கர்தினால்களாக, கடந்த சனவரி 6ம் தேதி அறிவித்தார் திருத்தந்தை.
மேலும், இப்புதிய கர்தினால்கள் உட்பட 133 கர்தினால்கள் இணைந்து, ஒருநாள் செபம் மற்றும் சிந்தனை நாளை திருத்தந்தையின் தலைமையில், இவ்வெள்ளிக்கிழமை அனுசரித்தனர்.
“இன்று நற்செய்தி அறிவித்தல், திருஅவையின் மறை அறிவிப்பும் புதிய நற்செய்திப்பணியும்” என்ற தலைப்பில் இச்செப நாள் நடைபெற்றது.
நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன், இந்நாளின் தலைப்பு குறித்தும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் அவையின் தலைவர் பேராயர் Salvatore Fisichella, விசுவாச ஆண்டு குறித்தும் இச்செப நாளில், தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தம் 7 பேர் வெவ்வேறு தலைப்புக்களில் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இப்புதிய கர்தினால்கள் தவிர, உட்பட தற்சமயம் திருஅவையில் 213 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 125 பேர் ஆவர்.








All the contents on this site are copyrighted ©.