2012-02-14 14:58:03

திருத்தந்தையின் இங்கிலாந்து திருப்பயணம், நெருங்கிய பிணைப்பை உருவாக்கியுள்ளது என்கிறார் இங்கிலாந்து அமைச்சர்


பிப்.14,2012. 17 மாதங்களுக்கு முன்னர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இங்கிலாந்தில் மேற்கொண்ட திருப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருங்கிய பிணைப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார் அந்நாட்டு அமைச்சர் சயீதா வார்சி.
தட்பவெப்ப நிலை மாற்றம், மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் ஊக்குவிப்பு, அமைதி முயற்சிகள், ஏழ்மை அகற்றல் போன்றவைகளில் வத்திக்கானும் இங்கிலாந்தும் ஒரே கொள்கைகளைக் கொண்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் இதில் ஒன்றிணைந்து உழைக்க முடியும் எனவும் கூறினார் அமைச்சர் வார்சி.
மோதல்கள், பாகுபாட்டு நிலைகள் ஆகியவைகளைக் களைந்து, இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இங்கிலாந்தும் வத்திக்கானும் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இங்கிலாந்து அமைச்சர் வார்சி.
இப்புதனன்று பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் குழு ஒன்று, புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தையை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.