2012-02-06 15:30:00

The Big Bang என்ற கோட்பாடு நமது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல - வத்திக்கான் விண்வெளி ஆயவாளர்


பிப்.06,2012. விண்வெளி உருவானதை விளக்க முற்படும் The Big Bang என்ற கோட்பாடு நமது விசுவாசத்திற்கு எதிரானது அல்ல என்று வத்திக்கான் விண்வெளி ஆயவாளர் ஒருவர் கூறினார்.
இத்தாலியில், கலிலேயோவின் பிறப்பிடமான Pisa நகரில் வத்திக்கான் விண்வெளி ஆய்வகம் நடத்தவிருக்கும் ஒரு கண்காட்சியைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வகத்தின் இயக்குனர் இயேசுசபை அருள்தந்தை Jose Gabriel Funes இவ்வாறு கூறினார்.
‘மற்றொரு உலகத்திலிருந்து கதைகள்: நமக்குள்ளும், வெளியிலும் உள்ள விண்வெளி’ (“Stories from another world: The Universe within us and outside us”) என்ற தலைப்பில் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் ஜூலை மாதம் முதல் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, விண்வெளியைக் குறித்து புதிய பாதையைக் காட்டிய கலிலேயோவின் பிறப்பிடத்தில் நடைபெறுவது பொருத்தமானது என்று அருள்தந்தை Funes எடுத்துரைத்தார்.
1400 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்வெளி உருவாகும் வகையில் நடைபெற்ற The Big Bang என்ற செயல்பாடு, கடவுள் இந்த விண்வெளியில் உள்ள அனைத்தையும் படைத்தவர் என்பதை மறுக்கவில்லை என்றும், விவிலியத்தில் கூறப்பட்டுள்ளவைகளுக்கும் அறிவியல் கூறுவதற்கும் முரண்பாடுகள் இல்லை என்றும் அருள்தந்தை Funes செய்தியாளர்களிடம் விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.