2012-02-04 15:25:50

பிலிப்பீன்சில் 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி


பிப்.04,2012. பிலிப்பீன்சைத் தாக்கும் எல்லாவிதமான இயற்கைப் பேரிடர்களின் போது, செயல்படும் முறை குறித்து கற்றுக் கொடுப்பதற்கென, 18 இலட்சம் தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பதற்கு அந்நாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் திட்டமிட்டுள்ளது.
“செஞ்சிலுவைச் சங்கம் 143” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சித் திட்டத்தின்கீழ், அந்நாட்டின் 42 ஆயிரம் கிராமங்களிலிருந்து, ஒவ்வொரு கிராமத்திற்கும் 44 தன்னார்வப் பணியாளர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவசரகாலப்பணி செய்யக் கற்றுக் கொடுக்கப்படுவார்கள் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது
2009ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை, பிலிப்பீன்சின் 60 விழுக்காட்டு கிராமங்களில், தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
2011ம் ஆண்டில் மட்டும் 33 இயற்கைப் பேரிடர்கள், பிலிப்பீன்சைத் தாக்கியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.