2012-02-03 15:57:03

பிப்ரவரி 13, அனைத்துலக வானொலி தினம்


பிப்.03,2012. பிப்ரவரி 13ம் தேதியை அனைத்துலக வானொலி தினமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ.
வானொலி ஒலிபரப்பு, வானொலி ஒலிபரப்பாளர்கள் மத்தியில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு, சமுதாய வானொலிகள் உட்பட அனைத்து வானொலிகள் மூலமாகத் தகவல்கள் பெறும் வழிகளை உருவாக்கி ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக, அனைத்துலக வானொலி ஒலிபரப்பு தினத்தைச் சிறப்பிக்கத் தீர்மானித்திருப்பதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இவ்வனைத்துலக வானொலி தினத்தை, மாநில, தேசிய, மற்றும் சர்வதேச அளவில் சிறப்பிக்குமாறும், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.