2012-02-03 16:03:28

பிப் 03, 2012. கவிதைக் கனவுகள்.......... சுமப்பது யார்?


துன்பங்களில் சாய தோள் தந்ததும்
துயர்களில் பெரும்பங்கைப் பறித்துக்கொண்டதும்
என் தவறுக்காய் அடிவாங்கியதும்
எதிர்பார்ப்பு இன்றி சேவை செய்ததும் யார்?
என் தாயா?

என்னை உணர வைத்ததும்
என் வளர்ச்சி கண்டு வியந்ததும்
சிந்திய கண்ணீரைத் துடைத்தெடுத்ததும்
எனக்காக சிந்தித்து, யோசிக்காமல் நேசித்ததும் யார்?
என் தந்தையா?

இன்பத்தில் இணைந்து மகிழ்ந்திட்டதும்
துன்பத்தில் உவந்து பகிர்ந்திட்டதும்
வெற்றியில் கைதட்டியதும்
தோல்வியில் கை கொடுத்ததும் யார்?
என் சகோதரனா?

குழந்தையாய் விளையாடியதில்,
இளமையின் ஊர்சுற்றலில்,
காளையாய் குறும்பில்,
வாலிபப் பருவ அரட்டைகளில்,
முதுமை அனுபவப் பகிர்வுகளில்
கூடவே இருந்தது யார்?
என் காதலியா?

வயிற்றில் சுமந்தத் தாயுமில்லை
தோள் சுமந்தத் தந்தையுமில்லை
உறவாய் இணைந்தச் சகோதரமுமில்லை
மடி சுமந்த மனைவியுமில்லை
நட்பு சுமந்த என் நண்பனே அவன்.
நட்பு சுமையில்லை, சுவை தான்.
உணர வைத்தவன் அவனே.








All the contents on this site are copyrighted ©.