2012-01-30 14:48:38

மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது குறித்து தலத்திருச்சபை மகிழ்ச்சி


சன.30,2012. மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது, அந்நாட்டு வரலாற்றிலும் மனித உரிமை மதிப்பு நிலையிலும் ஒரு முக்கியமான தருணம் என தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு உலான்பாட்டர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் வென்சஸ்லாவோ பதில்யா.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழியாகவும் அரசியல் மற்றும் கலாச்சார நிலையிலும் மரணதண்டனைக்கு எதிரான விழிப்புணர்வை மங்கோலியாவில் ஏற்படுத்தியதற்காக கத்தோலிக்க சான் எஜிதியோ குழுவிற்கும், மங்கோலியா சமூகத்திற்கும் தன் நன்றியை வெளியிட்டார் ஆயர் பதில்யா.
மங்கோலியாவில் ஏறத்தாழ 700 அங்கத்தினர்களையேக் கொண்டுள்ள தலத்திருச்சபை, மனித உரிமை மேம்பாட்டிற்கென நற்செய்தி மதிப்பீடுகளுடன் உழைத்து வருவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.