2012-01-28 15:50:05

புனித பூமியின் அமைதிக்காக 2,500 நகரங்களில் செபம்


சன.28,2012. புனித பூமியில் அமைதி ஏற்பட வேண்டும் எனும் நோக்கத்திற்காக, உலகில் குறைந்தது 2,500 நகரங்களின் மக்கள் இஞ்ஞாயிறன்று செபிக்கவிருக்கின்றனர்.
எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவருடன் சேர்ந்து சில கத்தோலிக்க இளையோர் கழகங்கள் எடுத்த முயற்சியினால் புனித பூமிக்காகச் செபிக்கும் சர்வதேச செப நாள் உருவாக்கப்பட்டது.
இதன்படி இஞ்ஞாயிறன்று நான்காவது சர்வதேச செப நாள் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தன்று எருசலேம் திருக்கல்லறை பசிலிக்காவில் திருப்பலியும் நடைபெறும்.
இந்நாளைச் சிறப்பிக்கும் இளையோருக்குச் செய்தியும் அனுப்பியுள்ளார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
இளையோர், அமைதியின் ஊற்றாகத் திகழ முடியும் எனவும், கிறிஸ்துவின் திருஅவையின் இளம் முகங்களை உலகுக்குக் காட்டும் இவ்விளையோருக்கு நன்றி கூறுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்







All the contents on this site are copyrighted ©.