2012-01-24 15:32:17

கவிதைக் கனவுகள் - விடுதலைப் பயணம்


விடுதலைப் பயணம் தொடர்ந்திடுவோம் - புது
விடியலை நோக்கி நடந்திடுவோம்
நரகமே நம்மை எதிர்த்தாலும் - நம்
உறுதியின் முன்னே அது வீழும்

மனதினில் உறுதியின் சுடர் வேண்டும் - அது
கனவின் திரிகளைத் தினம் தூண்டும்
நீதியின் வேட்கையில் தினம் எரியும் - அந்த
தீபங்களே இறை அரசாகும் - இந்த
அரசினை வளர்த்திட அநீதி வீழ்ந்திட
ஆயிரமாயிரம் உள்ளங்கள் உயர்ந்திட
விடுதலைப் பயணம் தொடர்ந்திடுவோம் - புது
விடியலை நோக்கி நடந்திடுவோம்

கண்களில் உண்மை ஒளி வேண்டும் - அங்கு
மனிதரின் மாண்பு தினம் தோன்றும்
மாண்புடன் வாழ்ந்திடும் மனுக்குலமே - அந்த
ஆண்டவன் விழையும் அரசாகும் - இந்த
அரசினை வளர்த்திட அநீதி வீழ்ந்திட
ஆயிரமாயிரம் உள்ளங்கள் உயர்ந்திட
விடுதலைப் பயணம் தொடர்ந்திடுவோம் - புது
விடியலை நோக்கி நடந்திடுவோம்








All the contents on this site are copyrighted ©.