2012-01-20 15:50:59

தென்னாப்ரிக்காவின் பாதுகாப்பு மசோதா, நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் - கேப்டவுண் பேராயர்


சன.20,2012. தென்னாப்ரிக்காவின் “தகவல் பெறும் சுதந்திரத்தையும்”, ஒளிவு மறைவில்லா நிர்வாகத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில், அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு மசோதாவில் மாற்றம் கொண்டுவரப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் Cape Town பேராயர் Stephen Brislin.
குடிமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்பது மட்டுமல்ல, பொதுநலனுக்குச் சேவைபுரிய வேண்டிய தார்மீகக் கடமையையும் கேப்டவுண் கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ளது என்பதால், இம்மசோதாவிற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்றும் பேராயர் Brislin கூறினார்.
நாட்டின் “தகவல் பாதுகாப்பு” மசோதா, ஏற்கனவே தென்னாப்ரிக்காவின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அது தற்போது, நாடாளுமன்றத்தின் மேல்சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இம்மசோதா சட்டமாக்கப்பட்டால், அதனை மீறுகிறவர்களுக்கு 25 வருடச் சிறைத்தண்டனையும் உண்டு.
இம்மசோதா, நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குகின்றது எனவும், தகவல் பெறும் உரிமை கொண்ட பொது மக்களுக்கு அவ்வுரிமையை இது கட்டுப்படுத்துகின்றது எனவும் பேராயர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.