2012-01-20 15:49:42

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட, மனிதன் பற்றிய கண்ணோட்டத்தை வழங்க வேண்டும் – திருப்பீட அதிகாரி


சன.20,2012. கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட, மனிதன் பற்றிய கண்ணோட்டத்தை வழங்க வேண்டுமென்று திருப்பீட இறைவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Canizares கேட்டுக் கொண்டார்.
இஸ்பெயினின் அவிலா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய கர்தினால் Canizares, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் மனிதன் பற்றிய கண்ணோட்டங்கள், கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்த இப்பிரதிநிதிகள், கடந்த ஆகஸ்ட் 12 முதல் 14 வரை அவிலாவில் நடைபெற்ற முதல் உலக கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத் தொகுப்பை அவரிடம் கொடுத்தனர்.







All the contents on this site are copyrighted ©.