2012-01-19 14:49:36

புற்றுநோயிலிருந்து குணமான 17 பேர் ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயர்ந்த கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அடைந்து சாதனை


சன.19,2012. புற்றுநோயிலிருந்து குணமான 17 பேரும் அவர்களுக்கு நலபராமரிப்பு வழங்கும் 20 பேரும் இணைந்து, ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயர்ந்த மலை என்று அழைக்கப்படும் 19340 அடி உயரமுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அண்மையில் அடைந்தனர்.
புற்றுநோயிலிருந்து குணமானவர்களில் 72 வயதான அருள்தந்தை Frank Bognannoவும் ஒருவர். 47 ஆண்டுகளாக குருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Bognannoவுக்கு 17 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயிலிருந்து இவர் குணமானபோதிலும், கடந்த மூன்று ஆண்டுகள் மீண்டும் இந்த நோய் இவர் உடலில் காணப்படுகிறது என்று CNS செய்திக் குறிப்பு கூறுகிறது.
புற்று நோயுற்றோரை ஒவ்வோர் ஆண்டும் மலைகளின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் மருத்துவர் Dr. Richard Deming, கடந்த ஆண்டு இந்த நோயுற்றோரை அழைத்துக் கொண்டு எவரெஸ்ட் மலை உச்சிக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.
மலையுச்சிக்குச் செல்வது இந்த நோயாளிகள் தங்கள் வாழ்வில் இந்த நோயை மேற்கொள்வதற்கு ஒரு அடையாளமாக, உந்துசக்தியாக உள்ளது என்று டாக்டர் Deming சுட்டிக்காட்டியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.