2012-01-19 14:48:33

எவரெஸ்ட் மலைப் பாதுகாப்பை வலியுறுத்த 1,700 கிலோமீட்டர் மாரத்தான் பயணத்திற்குத் திட்டம்


சன.19,2012. ‘உலகத்தின் கூரை’ என்று அழைக்கப்படும் எவரெஸ்ட் மலையைக் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்த Apa Sherpa என்ற மலையேறும் வீரர் 1700 கிலோமீட்டர் மாரத்தான் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
51 வயதான Apa Sherpa என்ற நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர் இதுவரை எவரெஸ்ட் உச்சியை 21 முறைகள் அடைந்து, உலகச் சாதனை படைத்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாம் எவரெஸ்ட் மலையை இழக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் Apa Sherpa 1700 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு மாரத்தான் பயணத்தை 120 நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த 120 நாட்களில் உலகின் மிக உயர்ந்த பத்துச் சிகரங்களை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாரத்தான் முயற்சியில் 11 பேர் ஈடுபட இருப்பதாகவும் இவர்களில் சிலர் அறிவியல் ஆய்வாளர்கள் என்றும் Apa Sherpa கூறினார்.
தெற்கு ஆசியாவிற்கு நல்ல குடி நீர் வழங்கும் இமய மலையைக் குறித்து ஆய்வுகள் நடத்தச் செல்லும் இந்த மாரத்தான் பயணம், மனித குலத்தைக் காக்கும் ஒரு முயற்சியே தவிர, இது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி அல்ல என்று உலகச் சாதனையாளர் Apa Sherpa தெளிவுபடுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.