2012-01-16 15:09:35

மத உரிமைகளுக்காகப் போராட அமைக்கப்பட்டுள்ள ஈக்குவதோர் ஆயர் பேரவையின் புதிய அமைப்பு


சன.16,2012. மதச்சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை, தனி மனிதரிலும், சமுதாயத்திலும் மதிக்கப்படவேண்டிய ஒன்று என அழைப்பு விடுத்துள்ளது ஈக்குவதோர் ஆயர் பேரவையின் நிரந்தர அவை.
மதநம்பிக்கையாளர்களுக்கான சம உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து புதிய திட்டம் மற்றும் தேசிய அளவிலான புது அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ள ஈக்குவதோர் ஆயர்கள், சிறுபான்மை மதத்தவர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் மதிக்கப்பட கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் திருஅவை நிறுவனங்கள் வழியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
தனிமனிதச் சுதந்திரம், மனச்சான்றிற்குக் கீழ்ப்படிதல், பன்மை நிலை, மதங்களின் கூட்டு வாழ்வு, தகவலைப் பெறுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் உரிமை போன்றவை மதிக்கப்பட வேண்டும் எனவும் ஆயர்கள் ஈக்குவதோர் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், மதக்கொண்டாட்டங்கள், மதங்களின் புனிதஇடங்கள், கல்லறைகள், மற்றும் பொது இடங்களிலும் தனியார் இடங்களிலும் மதச்சின்னங்களைக் கொண்டிருக்கஉரிமை போன்றவை மதிக்கப்படவேண்டும் எனவும் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.
ஈக்குவதோர் ஆயர்களால் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள அமைப்பு, அரசுக்கும் மதக்குழுக்களுக்குமிடையே உறவுகளை வளர்க்கவும், கல்வி, கலாச்சாரம், குடும்பநலன், கலை போன்றவைகளை முன்னேற்றவும் தனிக்கவனம் செலுத்தப் பாடுபடும் என ஆயர்கள் மேலும் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.